பா.ஜ.க.வினர் இடையே மோதல்; 2 பேர் காயம்
பா.ஜ.க.வினர் இடையே மோதல்; 2 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை
அறந்தாங்கி அருகே வைரிவயலை சேர்ந்தவர் கவிதாஸ்ரீகாந்த். இவருக்கு பா.ஜ.க. மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அவருக்கு பதவி வழங்கியதற்காக வாழ்த்து தெரிவித்து, பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் அறந்தாங்கி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பதாகை வைத்திருந்தனர். இந்த பதாகையில், அறந்தாங்கி நகர தலைவராக உள்ள ரமேஷ் என்பவரின் படம் இல்லை என கூறி ரமேஷ் ஆதரவாளர்கள் நேற்று இரவு வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்டு இருந்த பதாகையை கழட்டி உள்ளனர். இதனால் கவிதாஸ்ரீகாந் தரப்பினருக்கும், ரமேஷ் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த ஸ்ரீகாந்த், நகர தலைவர் ரமேஷ் ஆகிய இருவரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story