மது போதையில் இளைஞர்களுக்கு இடையே மோதல்
மது போதையில் இளைஞர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
ஆலங்குடி அண்ணா நகரில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில் ஒரு கடையில் நான்கு இளைஞர்கள் மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் மது அருந்திக்கொண்டு இருக்கும் போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்குள்ளவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இவர்கள் 4 பேரும் பாத்தம்பட்டி சாலையின் நடுவே ஒருவரை ஒருவர் கத்தி, பீர்பாட்டில், உருட்டு கட்டையால் தாக்கி கொண்டனர். இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் அனைத்து சாலையில் வரிசை கட்டி நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்த 3 பேர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் காயமடைந்த சிக்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் பிரவீன்குமார் (வயது 26) என்பவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.