10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்


10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்
x

10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

துடியலூர்

கோவையை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியைச் சேர்ந்த பரத் (வயது 20) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு, 10-ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த வாலிபர் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்தாக தெரிகிறது. இதனால் மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே மாணவியின் பெற்றோர் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், இதுகுறித்து கேட்டனர். அப்போது அவர், பரத் என்பவரும் ஏற்பட்ட பழக்கம் குறித்து கூறினார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர்் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பரத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


Next Story