10-ம் வகுப்பு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 20-ம் தேதி வெளியீடு


10-ம் வகுப்பு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 20-ம் தேதி வெளியீடு
x
தினத்தந்தி 16 Jun 2022 12:37 PM IST (Updated: 16 Jun 2022 12:40 PM IST)
t-max-icont-min-icon

நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

2021-22-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். அவர்களின் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த 1-ந் தேதி தொடங்கி 9-ந் தேதியுடன் நிறைவுபெற்றது.

திருத்திய மதிப்பெண்களை பட்டியலிட்டு, தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்து, தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யும் பணியும் முடிந்திருக்கிறது. ஏற்கனவே தேர்வு குறித்த அட்டவணை வெளியிடும்போதே, தேர்வு முடிவு ஜூன் 17-ந் தேதி (நாளை) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20- ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கள் கிழமை பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகல் திங்கள் கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge.tn.gov.in ஆகிய இணையதள பக்கங்களில் அறிந்துக் கொள்ளலாம். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.

தமிழகம் முழுவதும் அனைத்து மையம் மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் முதல் முறையாக ஒரே நாளில் வெளியிடப்படுகிறது.


Next Story