தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி - செல்போன் மோகத்தால் விபரீதம்


தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி - செல்போன் மோகத்தால் விபரீதம்
x

செல்போன் மோகத்தை தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

திருவள்ளூர்

பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை அருகே பொம்மராஜு பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. கூலி தொழிலாளி. இவரது மகள் பொன்மணி (வயது 15). இவர் சொரக்காய் பேட்டையில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். பொன்மணி வீட்டில் இருக்கும் சமயத்தில் வீட்டு வேலை செய்யாமல் எப்பொழுதும் செல்போனில் அதிக நேரத்தை செலவிடுவதாக கூறப்படுகிறது. இதை அவரது தாய் கண்டித்தார்.

இதனால் மன வேதனை அடைந்த பொன்மணி வீட்டில் தென்னை மரத்திற்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புகாரின் பேரில் பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story