தென்னை மரத்தில் மோதி 10-ம் வகுப்பு மாணவர் பலி


தென்னை மரத்தில் மோதி 10-ம் வகுப்பு மாணவர் பலி
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெகமம் அருகே தென்னை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 10-ம் வகுப்பு மாணவர் பலியானார்.

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் அருகே தென்னை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 10-ம் வகுப்பு மாணவர் பலியானார்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

10-ம் வகுப்பு மாணவர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நெகமத்தை அடுத்த வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் (வயது 15). இவர் புளியம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

சூரியபிரகாஷ், நேற்று முன்தினம் இரவு மகா சிவராத்திரி விழாவையொட்டி கரப்பாடியில் உள்ள சிவன் கோவிலுக்கு தனது நண்பர்களுடன் சென்றார். அப்போது அவருக்கு பசி எடுத்ததால், உணவு சாப்பிட தனது நண்பரான கவுதம் என்பவரது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

அவர், கொல்லப்பட்டி பிரிவில் திரும்பியபோது, எதிர்பாராதவித மாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியது. இதனால் கட்டுப்பாட் டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்று சாலையோ ரம் இருந்த தென்னை மரத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சூரியபிரகாஷ் படுகாயம் அடைந்தார். இதை யாரும் பார்க்கவில்லை என்று தெரிகிறது. இதனால் படுகாயத்துடன் அவர் உயிருக்கு போராடினார்.

விசாரணை

இதற்கிடையே சூரியபிரகாஷ் வீட்டுக்கு வராததால், அவரை தேடி உறவினர்கள் கோவிலுக்கு சென்றனர். அப்போது கொல்லப்பட்டி பிரிவில் சாலையோரம் மோட்டார் சைக்கிளுடன் அவர் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், சூர்யபிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த விபத்து குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story