மரத்தில் டிராக்டர் மோதி 10-ம் வகுப்பு மாணவர் பலி
வீரகேரளம் பகுதியில் மரத்தில் டிராக்டர் மோதி 10-ம் வகுப்பு மாணவர் பலியானார்.
வடவள்ளி
வீரகேரளம் பகுதியில் மரத்தில் டிராக்டர் மோதி 10-ம் வகுப்பு மாணவர் பலியானார்.
10-ம் வகுப்பு மாணவர்
கோவை அருகே செங்காளிபாளையம் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். கட்டிட தொழிலாளி. இவரது மகன் மணிகண்டன்(வயது 14). இவர் இடிகரையில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதையொட்டி மணிகண்டன், தனது மாமா வெள்ளியங்கிரி என்பவருடன் கம்பிவேலி அமைக்கும் வேலைக்கு சென்று வந்தார்.
மரத்தில் மோதியது
வீரகேரளம் பகுதியில் உள்ள பருத்தி இனப்பெருக்க மையத்தில் வேலையில் ஈடுபட்டு இருந்தபோது, கம்பிவேலி அமைக்க தேவையான பொருட்களை டிராக்டரில் ஏற்றி வந்திருந்தனர்.
அந்த டிராக்டர் மீது ஏறி அமர்ந்திருந்த மணிகண்டன் திடீரென லிவரை பிடித்து இழுத்ததால், பின்னோக்கி வேகமாக சென்ற டிராக்டர் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விசாரணை
இந்த விபத்தில் மணிகண்டன் பலத்த காயம் அடைந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வடவள்ளியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.