மோட்டார் சைக்கிள் மோதி 10-ம் வகுப்பு மாணவன் பலி


மோட்டார் சைக்கிள் மோதி 10-ம் வகுப்பு மாணவன் பலி
x

வேப்பந்தட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி 10-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

பெரம்பலூர்

10-ம் வகுப்பு மாணவன்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள சிறுநிலாவை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகன் தரணீஷ் (வயது 15). இவர் 9-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு 10-ம் வகுப்பு செல்வதற்கு தயாராக இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் மொபட்டில் தண்ணீர் பிடிப்பதற்காக சிறுநிலா சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக தரணீஷ் ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது.

பலி

இதில் படுகாயம் அடைந்த தரணீஷை அப்பகுதி மக்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story