அறிவுசார் பட்டறை வகுப்பு
உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் சார்பில் சர்வதேச விண்வெளி வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அந்தியூர் கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான வானவியல் சார் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
இதில் சூரிய குடும்பம், கோள்கள் சூரியனை சுற்றி வரும் விதம், நிலவின் முகங்கள், நட்சத்திர தொகுதிகளை எளிதில் அடையாளம் காணுதல், சூரிய கடிகாரம், பந்து கண்ணாடி மாயக்கண்ணாடி, ஓரிடத்தில் உள்ளூர் நண்பகல் நேரத்தை கணக்கிடுதல், சரியான திசைகளை சூரியனின் நிழலை வைத்து கணக்கிடுதல் போன்ற பல்வேறு கருத்துக்களை எளிமையாக தெரிந்து கொள்ளும் வகையில் எளிய பொருட்களைக் கொண்டு அறிவியல் சார் கருவிகளை மாணவர்களாகவே செய்வதற்கு வழி காட்டப்பட்டது.
அது சார்ந்த வானவியல் கருத்துக்களை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், ஜி.வி.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியும் கருத்தாளருமான ஹரிணி ஆகியோர் விளக்கிக் கூறினர். மேலும் ஆனைமலை புலிகள் காப்பகம் வன விலங்குகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து கூறினார். முடிவில் கல்லூரி அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கீதாமணி நன்றி கூறினார்.