11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப்படும் - தேர்வுத்துறை


11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப்படும் -  தேர்வுத்துறை
x
தினத்தந்தி 20 Jun 2023 9:20 AM GMT (Updated: 20 Jun 2023 9:22 AM GMT)

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 19 ஆம் தேதி வெளியானது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர் . தேர்வெழுதியவர்களில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விருப்பமுள்ளோர், விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


Next Story