மோட்டார்சைக்கிள் மோதி 8-ம் வகுப்பு மாணவன் பலி


மோட்டார்சைக்கிள் மோதி 8-ம் வகுப்பு மாணவன் பலி
x
தினத்தந்தி 18 Aug 2023 11:38 PM IST (Updated: 19 Aug 2023 4:06 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசியில் மோட்டார்சைக்கிள் மோதி 8-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி கோட்டை பழைய காலனியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் ஹேடன் (வயது 13). வந்தவாசியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் ஹேடன் சைக்கிளில் பள்ளிக்கு வந்துகொண்டிருந்தார்.

அப்போது வந்தவாசி -ஆரணி நெடுஞ்சாலையில் எதிரே வந்த மோட்டார்சைக்கிள் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஹேடனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story