அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று தொடக்கம்


அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று தொடக்கம்
x

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது.

பெரம்பலூர்

அரசு கல்லூரிகள்

தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதனை தொடர்ந்து உயர்கல்வி படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது தொடங்கியது. அந்த வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். அதன்பின் மதிப்பெண்கள் அடிப்படையில் தர வரிசையில் கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேப்பந்தட்டை கல்லூரி, வேப்பூர் மகளிர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து முடிந்தது.

வகுப்புகள் இன்று தொடக்கம்

இந்த நிலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. கல்லூரிகளில் காலை மற்றும் மதியம் என 2 பிரிவுகளில் வகுப்புகள் நடைபெறும். பள்ளிப்படிப்பை முடித்த பின் கல்லூரி படிப்பில் காலடி எடுத்து வைக்க மாணவ-மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் வருகை தருவார்கள்.

சீருடை அணிந்து பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் பல வண்ணங்களில் ஆடை அணிந்து கல்லூரிக்கு மகிழ்ச்சியுடன் வருவார்கள். கல்லூரிகளிலும் முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு முன்கூட்டியே தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story