முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நாளை தொடங்குகிறது
ரிஷிவந்தியம் அரசு கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நாளை தொடங்குகிறது முதல்வர் தகவல்
கள்ளக்குறிச்சி
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் அருகே உள்ள அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் ரிஷிவந்தியம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை(திங்கட்கிழமை) பிற்பகல் தொடங்குகிறது. இட நெருக்கடி காரணமாக சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டு 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள் முற்பகலில் கல்லூரிக்கு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு கல்லூரி முதல்வர் ரேவதி வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story