அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள்


அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள்
x

இடையாத்தி தெற்கு பகுதியில் அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிடங்களை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்:

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள இடையாத்தி ஊராட்சி, இடையாத்தி தெற்கு ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.19.60 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார். இதில் பேராவூரணி ஒன்றிய ஆணையர்கள், செல்வேந்திரன், தவமணி, வட்டாரக் கல்வி அலுவலர் அங்கயற்கண்ணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் அன்புக்கரசி செல்வராஜ், ஒன்றியக் குழு துணை தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, ஒன்றியக் குழு உறுப்பினர் ரேவதி கண்ணன், ஊராட்சி மன்ற துணை தலைவர் தமிழ்ச்செல்வி நடராஜன், வட்டார காங்கிரஸ் தலைவர் வெங்கடாசலம், தலைமையாசிரியர் (பொறுப்பு) கண்ணதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக பட்டுக்கோட்டை அருகே சீதாம்பாள்புரம் வாரியின் குறுக்கே, நெடுஞ்சாலை துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், ரூ.3.71 கோடியில் புதிய பாலம் கட்டும் பணியை அசோக்குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


Next Story