மது குடித்ததை மனைவி கண்டித்ததால் துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

மது குடித்ததை மனைவி கண்டித்ததால் துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 36), துப்புரவு தொழிலாளி. இவருடைய மனைவி ராதிகா (35). சுப்பிரமணியனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனை ராதிகா கண்டித்து வந்துள்ளார்.
இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏறபட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சுப்பிரமணியன் வீட்டிற்கு மது போதையில் வந்தார். இதனால் கோபமடைந்த ராதிகா தனது குழந்தைகளை அழைத்து கொண்டு தாயார் வீட்டிற்கு சென்றார். இதில் மனமுடைந்த சுப்பிரமணியன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
---