சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி


சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

திருவாரூர் மாவட்டத்தில் கிராம, நகர்ப்புறங்களில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் என கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர்


திருவாரூர் மாவட்டத்தில் கிராம, நகர்ப்புறங்களில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் என கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன்கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்டத்தில் கிராம, நகர்ப்புறங்களில் தூய்மை, சுகாதாரம் குறித்து நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தூய்மை பணிகள்

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளில் தூய்மை பணிகள், சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக நம்ம ஊரு சூப்பரு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. அதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், பூங்காக்கள் ஆகியவைகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தேசிய மாணவர் படை பங்கேற்புடன் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஒத்துழைப்பு

ஊராட்சி பகுதிகள், பள்ளி, கல்லூரிகளில் நீர் மேலாண்மை, சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வருகிற 27-ந் தேதி(சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந் தேதி வரை நடத்தப்பட வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பங்கேற்புடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நடத்த வேண்டும். நம்ம ஊரு சூப்பரு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பாக மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் கூறினார்.கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) ஸ்ரீலேகா, உதவி இயக்குனர் பொன்னியின் செல்வன், உதவி திட்ட அலுவலர் செந்தில், செயற்பொறியாளர் சடையப்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (தூய்மை பாரதம்) அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story