தர்மபுரி ராமக்காள் ஏரிக்கரையில் தீவிர துப்புரவு முகாம்


தர்மபுரி ராமக்காள் ஏரிக்கரையில்  தீவிர துப்புரவு முகாம்
x

தர்மபுரி ராமக்காள் ஏரிக்கரையில் தீவிர துப்புரவு முகாம் நடந்தது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி நகராட்சி சார்பில் ராமக்காள் ஏரிக்கரையில் தீவிர துப்புரவு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், நகராட்சி துணைத்தலைவர் நித்யா அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமையொட்டி ஏரிக்கரையில் உள்ள நடைபாதையில் இருந்த குப்பைகள், முட்புதர்கள் அகற்றப்பட்டது. மேலும் ஏரிக்கரையில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள் அகற்றப்பட்டன. நகராட்சி துப்புரவு பணியாளர்கள், மை தர்மபுரி தொண்டு நிறுவன அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். முன்னதாக என் நகரம்- என் பெருமை என்ற திட்டத்தின் கீழ் அனைவரும் என் குப்பை, என் பொறுப்பு என்ற முழக்கத்துடன் உறுதிமொழி ஏற்று கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், ரமணசரண், சீனிவாசலு, நகராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, ஜெகன், மை தர்மபுரி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story