தூய்மைப்பணி


தூய்மைப்பணி
x

பூம்புகார் கடற்கரையில் தூய்மைப்பணி நடந்தது. இதில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டது.

மயிலாடுதுறை

பூம்புகார் கடற்கரையில் தூய்மைப்பணி நடந்தது. இதில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டது.

தூய்மைப்பணி

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி சீர்காழி அருகே காரைமேடு பகுதியில் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் கீழ் இயங்கி வரும் ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் கந்தன் தலைமையில் அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் என 100-க்கும் மேற்பட்டோர் பூம்புகார் கடற்கரையில் நேற்று காலை தூய்மைப்பணியை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கடற்கரை

மணல் பரப்பில் சிதறி கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், ஐஸ்கிரீம் கப், பேப்பர், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை அகற்றி சுத்தம் செய்தனர்.

2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்

இதுகுறித்து ராஜீவ் காந்தி நீர் வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் கந்தன் கூறுகையில், பாரத பிரதமரின் முக்கிய நோக்கம் தூய்மை இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் கடல்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள 14 மையத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று காரைமேடு ராஜீவ் காந்தி நீர் வாழ் உயிரின ஆராய்ச்சி மையம், தொடுவாய் கடற்கரை பகுதியிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பூம்புகார் கடற்கரையில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.

1 More update

Next Story