தூய்மை பணி
மூலைக்கரைப்பட்டியில் தூய்மை பணி நடைபெற்றது.
திருநெல்வேலி
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் தொடர்பான திட்டம் ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி சிறப்பு தீவிர தூய்மை பணி நடைபெற்றது. மூலைக்கரைப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகம், ஓடை இசக்கியம்மன் கோவில்பகுதி, பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சமுதாய பொதுக்கழிப்பிடம் பகுதிகளில் தூய்மை பணி நடைபெற்றது. வடக்குப்பகுதி தண்ணீர் தொட்டி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் கு.பார்வதிமோகன், துணைத்தலைவர் ர.நம்பி, செயல் அலுவலர் சாஜன் மேத்யூ மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story