பஸ் நிலையத்தில் தூய்மை பணி


பஸ் நிலையத்தில் தூய்மை பணி
x
தினத்தந்தி 17 Sept 2023 12:30 AM IST (Updated: 17 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் பஸ் நிலையத்தில் தூய்மை பணி நடந்தது.

நீலகிரி

குன்னூர்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் டெங்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர் அருணா உத்தரவிட்டு உள்ளார். அதன் பேரில் குன்னூர் நகராட்சி ஊழியர்கள் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவது, கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்வது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குன்னூர் பஸ் நிலையத்தில் தூய்மை பணி நடந்தது. நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் உத்தரவின் பேரில், சுகாதார அலுவலர் சரவணன், துப்புரவு ஆய்வாளர்கள் வைரம், சரவணன் தலைமையில் ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.


Next Story