கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணி


கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணி
x
தினத்தந்தி 2 Oct 2023 6:45 PM GMT (Updated: 2 Oct 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் குப்பை இல்லா இந்தியாவை உருவாக்கும் வகையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து நீதிமன்ற வளாகத்திலும் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது. இதற்கு முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி முகமதுஅலி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுகந்தி ஆகியோர் தலைமை தாங்கி தூய்மை பணியை தொடங்கி வைத்தனர். இதில் வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டு, நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதி குடியிருப்பு பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

இதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் சீனிவாசன், பொருளாளர் அலெக்ஸ், துணை தலைவர் தியாகராஜன், நீதிமன்ற நூலகர் வெற்றிவேல், அரசு வக்கீல்கள் அருண்பிரசாத், ராமலிங்கம், முன்னாள் வழக்கறிஞர் சங்க செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story
  • chat