ரெயில் நிலையத்தில் தூய்மை பணி


ரெயில் நிலையத்தில் தூய்மை பணி
x

செங்கோட்டை ரெயில் நிலையத்தில் தூய்மை பணிகள் நடைபெற்றது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை ரெயில் நிலையத்தில் நடைபெற்ற தூய்மைக்கான அர்ப்பணிப்பு விழா நடந்தது. செங்கோட்டை ரெயில் நிலையத்தில் நடந்த தூய்மைக்கான அர்ப்பணிப்பு சுத்தம் செய்யும் விழாவில் செங்கோட்டை நிலைய அனைத்து அதிகாரிகள் ஊழியர்களுடன் இணைந்து செங்கோட்டை ரெயில் பயணிகள் நலச்சங்க துணைத்தலைவர் ராஜேந்திர ராவ் செயலாளர் கிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ராமன் ஆகியோர் கலந்து கொண்டு ரெயில் நிலையம் மற்றும் வளாகத்தை தூய்மை படுத்தினர்.மேலும் சிறப்பாக நிகழ்ச்சியை செய்து இருந்த செங்கோட்டை ரயில் நிலைய அதிகாரிகளையும் ஊழியர்களையும் பாராட்டினர். செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் செங்கோட்டை ரயில் நிலைய மேலாளர் ராஜீக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் சார்பில் நிகழ்ச்சியில் பங்கேற்ற செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தை சார்ந்த ராஜேந்திர ராவ்.கிருஷ்ணன், ராமன் ஆகியாருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


Next Story
  • chat