குடியாத்தத்தில் தூய்மை பணி
குடியாத்தத்தில் தூய்மை பணி நடைபெற்றது.
குடியாத்தம் நகராட்சிப் பணிகள் பகுதிகளில் நேற்று தூய்மை பணியாளர்களின் தூய்மையே சேவை என்ற தூய்மை பணி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தூய்மை பணியாளர்கள் குடியாத்தம் புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தூய்மை பணியை மேற்கொண்டு குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினார்கள்.
நிகழ்ச்சிகளின் போது கலந்து கொண்ட குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தராஜன் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணி மேற்கொள்வோம், நகரை தூய்மையாக வைத்திருப்போம், முழு சுகாதாரத்தை பேணுவோம் என தூய்மை பணியாளர்களுடன் உறுதிமொழி ஏற்றார்.
தொடர்ந்து தூய்மையே சேவை என பணியாற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டி அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கே.கண்ணன், சுகாதார அலுவலர் இசட்.அலி, தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் பென்னி, சந்தோஷ், ராஜேஷ் உள்பட தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.