'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தில் தூய்மை பணி-கலெக்டர் தொடங்கி வைத்தார்


நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் தூய்மை பணி-கலெக்டர் தொடங்கி வைத்தார்
x

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை கிராம பஞ்சாயத்தில் தூய்மை பார்வை இயக்கத் திட்டத்தின் கீழ் ‘நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தினை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை கிராம பஞ்சாயத்தில் தூய்மை பார்வை இயக்கத் திட்டத்தின் கீழ் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தினை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்.

பார்வையிட்டார்

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை கிராமத்தில் தூய்மை இயக்கத் திட்டத்தின் கீழ் தண்ணீர் சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற சிறப்பு பிரசார திட்டத்தினை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார். சூலக்கரையில் உள்ள அரசுப்பள்ளிகள், அங்கன்வாடிகள், நீர்நிலைகள், பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். இந்த பணியினை தூய்மை பணியாளர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் செய்தனர்.

மேலும் சுகாதாரம் குறித்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும், நாடகம் கவிதை பாடலின் மூலமாக பகுதி மக்களுடைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பிரசாரம்

இதனை தொடர்ந்து கலெக்டர் தெரிவித்ததாவது, விருதுநகர் மாவட்டத்திலுள்ள 480 கிராம பஞ்சாயத்துக்களிலும் தூய்மை பார்வை இயக்க திட்டத்தின் கீழ் தண்ணீர் சுகாதார மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் நம்ம ஊரூ சூப்பரு என்ற சுகாதார சிறப்பு பிரசாரம் அக்டோபர் முதல் தேதி வரை நடைபெற உள்ளது. பள்ளி கல்லூரிகளில் வருகிற 27-ந் தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரையிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

செப்டம்பர் 3-ந் தேதி முதல் செப்டம்பர் 16-ந் தேதி வரை மகளிர் சுய உதவி குழு மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் திலகவதி பஞ்சாயத்து தலைவர் புஷ்பம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story