தூய்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி


தூய்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
x

குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் தமிழக அரசு உத்தரவின் பேரில் பொதுமக்கள், வணிகர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் தூய்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதியில் மற்றும் பிரதான இடங்கள், பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருக்க வேண்டும், குப்பைகளை வீட்டிலேயே தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும், குத்தாலம் பேரூராட்சி பகுதியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், நீர்நிலைப்பகுதிகளில் குப்பைகளை கொட்டக்கூடாது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. ேமலும் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாலித்தீன் பைகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறி அவர்களுக்கு மஞ்சள் பைகள் வழங்கப்பட்டன. இதில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story