தூய்மையே சேவை சிறப்பு முகாம்


தூய்மையே சேவை சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 19 Sept 2023 12:15 AM IST (Updated: 19 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருப்புகலூர் ஊராட்சியில் தூய்மையே சேவை சிறப்பு முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

தூய்மை பாரத இயக்க ஊரகம் விழிப்புணர்வு செயல்பாடுகளின் தூய்மையே சேவை சிறப்பு முகாம் திருப்புகலூர் ஊராட்சி வவ்வாலடியில் தொடங்கியது. முகாமை ஊராட்சி தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இதில் வவ்வாலடி பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு, அங்குள்ள குப்பைகள் அகற்றப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் ஊராட்சியை தூய்மையாக வைக்க பாடுபடுவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர், ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் பனங்குடி ஊராட்சியில் முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.


Next Story