அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பணி


அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பணி
x

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பணி நடைபெற்றது.

அரியலூர்

பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளுக்கு இணங்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு தழுவிய தூய்மை இயக்கம் அக்டோபர் 1-ந் தேதி நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2-ந் தேதி கொண்டாடப்படும் காந்தி ஜெயந்தியையொட்டி 1-ந்தேதி இந்த தூய்மை பணியில் அனைவரும் நேரம் ஒதுக்கி பங்கேற்று வருகின்றனர். அதன்படி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பணி நடைபெற்றது. இதில் பள்ளி வளாகம் முழுவதும் பொக்லைன் எந்திரம் மூலம் மலைபோல் குவிந்திருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. இதற்கு தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி வேளாண்மை கிளையின் சார்பில் முதன்மை மேலாளர் உமாசங்கர், வங்கி துணை மேலாளர்கள் செந்தில்குமார், கோமதி, ஜெயந்தா, முதன்மை வங்கி மேலாளர் லைனல் பெனடிக் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு, பள்ளி ஆய்வகம் மற்றும் பல இடங்களில் உள்ள குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினர்.


Next Story
  • chat