கடலூர் ஒன்றியத்தில் 51 ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் தூய்மை பணி


கடலூர் ஒன்றியத்தில் 51 ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் தூய்மை பணி
x

கடலூர் ஒன்றியத்தில் 51 ஊராட்சியில் நடைபெறும் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் தூய்மை பணியை அதிகாாிகள் ஆய்வு செய்தனா்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

கடலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 51 ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் வருகிற 1-ந்தேதி வரைக்கும் தூய்மை பணிகள் நடைபெற இருக்கிறது. இதில், அரசு அலுவலகங்கள், நீர்நிலைகள் மற்றும் ஊராட்சி பகுதிகள் என்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்த்து மாற்றுப் பொருட்கள் உபயோகிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில், கடலூர் அடுத்த ராமாபுரம் சமத்துவபுரம் பகுதியில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி, அசோக் பாபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, வட்டார ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது ஒன்றிய கவுன்சிலர் குமுதம் சேகர், ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி பழனிவேல், வார்டு கவுன்சிலர் ஜெய்சங்கர், மக்கள் நல பணியாளர் ஜோதி, ஊராட்சி செயலாளர் சக்தி மற்றும் தன்னார்வலர்கள் பலர் உடனிருந்தனர்.


Next Story