சிந்தாதிரிப்பேட்டையில் 26 பவுன் நகைகளை திருடிய தூய்மை பணியாளர் கைது


சிந்தாதிரிப்பேட்டையில் 26 பவுன் நகைகளை திருடிய தூய்மை பணியாளர் கைது
x

சிந்தாதிரிப்பேட்டையில் 26 பவுன் நகைகளை திருடிய தூய்மை பணியாளரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை சிந்தாதிரிப்பேட்டை புதிய பங்களா தெருவை சேர்ந்தவர் துளசி ராஜா. இவருடைய மனைவி ஷாலினி (வயது 32). இவர் தனது வீட்டில் ஒருநாள் தூய்மை பணிக்கு 'ஆன்லைன்' செயலி மூலம் பதிவு செய்திருந்தார். இதையடுத்து ஒரு நிறுவனம் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ராபர்ட் (32) என்பவரை கடந்த மாதம் 23-ந்தேதி அன்று அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தது. அவர் அன்றைய தினம் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சென்றார்.

இந்த நிலையில் ஷாலினி கடந்த 10-ந்தேதி தனது மகனின் பிறந்தநாள் விழாவுக்கு நகைகள் அணிவதற்காக பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பீரோவில் இருந்த 26 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது.

வீட்டு வேலைக்கு வந்த ராபர்ட் மீது ஷாலினிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தனது வீட்டில் மீண்டும் வேலை இருக்கிறது என்று ராபர்ட்டை அழைத்துள்ளார். அவரும் உடனடியாக வந்தார். அவரிடம் விசாரித்த போது, நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். ராபர்ட்டை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.


Next Story