நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் மூலம் தூய்மை பணிகள்


நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் மூலம் தூய்மை பணிகள்
x

நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கரூர்

கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியம், ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சிக்குட்பட்ட கோவிந்தம்பாளையம் கிராமத்தில் ஊராட்சித்துறையின் சார்பில் நம்ம ஊரு சூப்பரு என்ற இயக்கத்தின் மூலம் தூய்மை பணிகளை கலெக்டர் பிரபுசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் மொச்சைக்கொட்டம்பாளையத்தில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நம்ம ஊரு சூப்பரு என்ற இயக்கத்தின் முக்கிய நோக்கம் ஒவ்வொரு மக்களுக்கும் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, நமது இடத்தினை பசுமையாக வைத்துக்கொள்ள வேண்டும். கரூர் மாவட்டத்தில் 456 இடங்கள் கண்டறியப்பட்டு கடந்த 20-ந்தேதி முதல் வருகிற 2-ந்தேதி வரை இந்த தூய்மை பணிகள் செய்வதற்காக செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. 267 இடங்களில் குப்பை தேங்கியுள்ள அல்லது அதிகம் உள்ள முக்கிய பகுதிகள் கண்டறியப்பட்டு இன்றைய தினம் ஆய்வு செய்யப்பட்டு தூய்மை பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தூய்மை, சுகாதாரம் மற்றும் கழிவுகள் மேலாண்மை பாதுகாப்பு, குடிநீர் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய ஒரு திட்டங்களும் நடைபெற்று வருகிறது. மேலும் பிளாஸ்டிக் பயன்பாடு ஒரு முறை பயன்படுத்துவதை குறைப்பதற்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு மீண்டும் மஞ்சப்பை இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதற்கு 2 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து வருகிறோம். அதில் 10 வகையான முருங்கை, வேம்பு, பூவரசு, போன்ற பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் நிலவுவதற்கும் ஒரு பசுமையான சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story