ஆக்கிரமிப்புகள் அகற்றம்: வீடுகளை இழந்த 32 குடும்பத்தினருக்கு அரசு குடியிருப்பில் புதிய வீடுகள்


ஆக்கிரமிப்புகள் அகற்றம்: வீடுகளை இழந்த 32 குடும்பத்தினருக்கு அரசு குடியிருப்பில் புதிய வீடுகள்
x

தாம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் வீடுகளை இழந்த 32 குடும்பத்தினருக்கு அரசு குடியிருப்பில் புதிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு தாம்பரம் பாரதமாதா சாலையில், சாலை விரிவாக்கம் செய்த போது சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது. அதேபோல மேற்கு தாம்பரம், அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்காக அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட போது அதில் வீடுகளை இழந்தவர்கள் தங்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

32 குடும்பத்தினருக்கு புதிய வீடுகள்

இந்த கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ.எஸ்.ஆர்.ராஜா பல்வேறு முயற்சிகளை எடுத்து தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்தூர் மண்டலம், தர்காஸ் சாலையில் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான ஆணைகளை நேற்று சம்பந்தப்பட்ட 32 குடும்பத்தினரிடமும் வழங்கினார். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அப்போது குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர் அருண்குமார், உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், கண்காணிப்பாளர் முருகன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக் மற்றும் தி.மு.க.வினர் உடன் இருந்தனர்.


Next Story