துவரங்குறிச்சியில் 2-வது நாளாக கால்வாயில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றம்


துவரங்குறிச்சியில் 2-வது நாளாக கால்வாயில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றம்
x

துவரங்குறிச்சியில் 2-வது நாளாக கால்வாயில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்டன.

திருச்சி

துவரங்குறிச்சியில் 2-வது நாளாக கால்வாயில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு

துவரங்குறிச்சியில் பஸ் நிலையம் எதிரே கடைவீதி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததால் கழிவுநீர் வெளியே செல்ல வழியின்றி தேங்கி கிடந்தது.

இதனால் துர்நாற்றம் வீசியதுடன், நோய் பரவும் அபாயமும் இருந்து வந்தது. கடைவீதி பகுதிகளில் கழிவுநீர் செல்லும் பாதையை கடைகள் வைத்து ஆக்கிரமித்து இருந்தனர். இந்நிலையில் பொன்னம்பட்டி பேரூராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி கடை உரிமையாளர்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது.

அதன்படி கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றினர். பின்னர் நேற்று முன்தினம் காலை பொன்னம்பட்டி பேரூராட்சி சார்பில் கழிவு நீர் கால்வாய் செல்லும் பாதையில் அடைப்புகளை பொக்லைன் எந்திரம் மற்றும் பணியாளர்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.

2-வது நாளாக...

இந்நிலையில் 2-வது நாளாக நேற்றும் இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story