காலநிலை மாற்ற பயிலரங்கம் - கலெக்டர் தலைமையில் நடந்தது


காலநிலை மாற்ற பயிலரங்கம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
x

காலநிலை மாற்ற பயிலரங்கம் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது.

காஞ்சிபுரம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்ககம் தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்டு பல்வேறு செயல் திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் காலநிலை மாற்ற பயிலரங்கத்தை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்து ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார்.

இந்த பயிலரங்கில் காஞ்சீபுரம் மாவட்ட காலநிலை மாற்றம் குறித்தும், இந்த ஆண்டுக்கான மழைப்பொழிவின் மாறுதலை பற்றியும், மாவட்டத்தில் பசுமை பரப்பு அதிகரிக்கும் நோக்கத்தை பற்றியும், அரசு அலுவலர்களுடன் கலைந்துரையாடினார்.

பல்வேறு துறைகளில் இருந்து அரசு அலுவலர்கள் பயிலரங்கத்தில் கலந்து கொண்டதால் இதனை ஒரு நல்ல வாய்ப்பாக கருதி காலநிலை மாற்றத்தால் நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் எந்தவிதமான இடர்பாடுகள் வரலாம் அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பயிலரங்கத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டது.

இந்த பயிலரங்கில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்ககம், துணை இயக்குநர் மணிஷ் மீனா, மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சுற்றுச்சூழல் துறை வல்லுனர்களும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.


Next Story