பள்ளியில் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து கண்காணிப்பு கேமராக்கள் உடைப்பு


பள்ளியில் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து கண்காணிப்பு கேமராக்கள் உடைகங்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

பள்ளியில் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து கண்காணிப்பு கேமராக்கள் உடைகங்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள சந்தை மைதானம் எதிரில் திருப்பத்தூர் வாணியம்பாடி நோக்கி செல்லும் சாலையில் தனியார் பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் 3 பேர் பள்ளியின் பின்புறம் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து பள்ளி வளாகத்தில் உள்ள மூன்று கண்காணிப்பு கேமராக்களை உடைத்து உள்ளனர். இந்த பள்ளியின் அருகே உள்ள குடியிருப்பின் கீழ்தளத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 3 குடும்பத்தினர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அதே குடியிருப்பின் மேல் தளத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி வசித்து வருகிறார். பள்ளிக்குள் குதித்து கண்காணிப்பு கேமராக்களை உடைத்த நபர்கள் பி்ன்னர் மீண்டும் சுவர் ஏறி குடியிருப்புக்குள் குதித்ததாக தெரிகிறது.

அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்து போது 3 பேரில் இருவர் தப்பி ஓடி விட்டனர். இதில் ஒருவரை மடக்கி பிடித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் அங்கு வந்து பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் கொடுக்கதால் அவரை விடுவித்து அனுப்பி வைத்தனர்.


Next Story