மே தினத்தை முன்னிட்டு, நாளை மறுநாள் மதுபான கடைகளை மூட கலெக்டர் உத்தரவு


மே தினத்தை முன்னிட்டு, நாளை மறுநாள் மதுபான கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மே தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை மூட அரசால் உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்.எல்.3 உரிம வளாகங்கள் மற்றும் மதுக்கூடங்களை மூட வேண்டும். அரசின் உத்தரவை மீறி மதுபான கடைகளை திறந்தாலோ, மதுபானங்களை மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story