தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ளஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ளஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தலைவர் இசக்கிராஜா தலைமையில் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் 3-வது மைல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் முருகனின் போர்படை தளபதி வீரபாகு தேவர் என்பதை மாற்றி வீரபாகு மூர்த்தி என பெயர் மாற்றம் செய்துள்ளதை கண்டித்தும், திருச்செந்தூர் பிரகார மண்டபத்துக்கு சின்னப்ப தேவர் பெயரை சூட்ட வேண்டும், திருச்செந்தூரில் உள்ள கல்வெட்டுகளை பொதுமக்களுக்கு தெரியும்படி பொது இடத்தில் வைக்க வேண்டும், திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழுவில் முக்குலத்தோருக்கு இடமளிக்க வேண்டும். பி.சி.ஆர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் உள்ளிட்ட தொழிற்சாலைகளை திறந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொறுப்பாளர் ராஜசேகர், மாநில இளைஞரணி சுந்தர பாண்டியன், செல்வசக்தி பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கோபால் சங்கர், தூத்துக்குடி மாவட்ட அமைப்பு செயலாளர் கருங்குளம் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story