கூடைப்பந்து கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா


கூடைப்பந்து கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா
x

கூடைப்பந்து கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

கரூர்

கரூர் மாநகராட்சி மற்றும் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் நடத்தப்பட்ட கூடைப்பந்து கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட கூடைப்பந்து கழக சேர்மன் தனபதி தலைமை தாங்கினார். இந்த பயிற்சி முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்று வந்த மாணவ, மாணவிகளுக்கு தினமும் சத்தான தானிய வகைகள், முட்டை, பிஸ்கட், நிலக்கடலை, பால் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்று வந்த பயிற்சியின் போது கரூர் நகர தொழில் அதிபர்களும், பள்ளி அளவிலான உடற்கல்வி ஆசிரியர்களும் கலந்து கொண்டு ஊக்கப்படுத்தினர். இந்த கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழாவில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சீருடை, சான்றிதழ் வழங்கினர். மேலும் 16 வயதிற்குட்பட்ட இளம் வீரர்களுக்கு கூடைப்பந்து போட்டி விருதுநகரில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ஒரு ஆண்கள் அணியும், ஒரு பெண்கள் அணியும் அனுப்பி வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story