தேரை அலங்கரிக்க ரூ.1½ லட்சத்தில் துணி


தேரை அலங்கரிக்க ரூ.1½ லட்சத்தில் துணி
x

அணைகரைக்கோட்டாலம் பொண்ணு முத்துமாரியம்மன் கோவில் தேரை அலங்கரிக்க ரூ.1½ லட்சத்தில் துணியை ஒன்றியகுழு தலைவர் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே அணைகரைக்கோட்டாலம் கிராமத்தில் பொண்ணு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர்திருவிழா கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் திருவிழா நடத்த முடிவு செய்த அந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து புதியதாக தேர் செய்தனர். இதனைத்தொடர்ந்து இன்று (புதன்கிழமை) தேர்திருவிழா நடைபெற உள்ளது. இதையடுத்து புதிதாக செய்யப்பட்ட தேரை அலங்கரிக்க தேவையான துணியை நன்கொடையாக வழங்க வேண்டும் என கிராம மக்கள் கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகத்திடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று தேரை அலங்கரிக்க ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான துணியை ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார். .அப்போது தி.மு.க. மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வாணியந்தல் ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ் மற்றும் தி.மு.க.நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்பட பலர் இருந்தனர்.


Related Tags :
Next Story