ரெயில்வே மேம்பாலம் அமைத்து தாங்க "சி.எம். தாத்தா" - மழலை மொழியில் கோரிக்கை விடுத்த சிறுமி - வைரலாகும் வீடியோ
ரெயில்வே மேம்பாலம் அமைத்து தாங்க "சி.எம். தாத்தா" என மழலை மொழியில் சிறுமி கோரிக்கை விடுத்த்துள்ளார்.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் பள்ளிக்கு செல்லும் போது காரில் இருந்தபடி ரெயில்வே மேம்பாலம் அமைத்து தாங்க "சி.எம். தாத்தா" என்று மழலை பேச்சில் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த விடியோவில் ""சி.எம். தாத்தா" நான் சிவகாசியில் இருந்து பேசுறேன் தாத்தா.... எங்க சிவகாசியில் ரெயில்வே மேம்பாலம் அமைத்து தாங்க தாத்தா... நான் தினமும் பள்ளிக்கு (லேட்டாக) தாமதமாக போகிறேன் தாத்தா.. ரெயில்வே கேட் போட்டுருதாங்க தாத்தா.." என்று வீடியோவில் மழலை மொழியில் சிறுமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை சிறுமியின் பெற்றோர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story