"அனைத்தும் சாத்தியம்" - மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மாற்றுத் திறனாளிகளுக்கான 'அனைத்தும் சாத்தியம்' என்ற அருங்காட்சியகத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,
மாற்றுத் திறனாளிகளுக்கான 'அனைத்தும் சாத்தியம்' என்ற அருங்காட்சியகத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை, காமராஜர் சாலையில் மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தை திறந்து வைத்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளுக்காக நேரடி மானியம் தரும் திட்டத்தையும் தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.
தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக நாளை மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு செல்கிறார். அங்கு சமத்துவ புரத்தை திறந்துவைத்து, பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ய உள்ளார்.
Related Tags :
Next Story