சேதமடைந்த நெற்பயிர்களை இணை இயக்குனர் ஆய்வு


சேதமடைந்த நெற்பயிர்களை இணை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Jun 2023 12:05 AM IST (Updated: 22 Jun 2023 12:36 PM IST)
t-max-icont-min-icon

நெமிலியில் சேதமடைந்த நெற்பயிர்களை இணைஇயக்குனர் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

நெமிலி சுற்றுவட்டார பகுதிகளான வேட்டாங்குளம், ரெட்டிவலம், பனப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்பேரில் நேற்று வேளாண்மை துறை சார்பில் பயிர் சேதங்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வடமலை நேரில் ஆய்வு செய்தார். அப்போது 43 ஏக்கர் நெற்பயிர் மழையால் லேசாக சேதமடைந்துள்ளதாகவும், உரிய விவசாயிகளுக்கு மழை நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், உதவி வேளாண்மை அலுவலர்கள் நவமணி, ஸ்ரீபிரியா, செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story