கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சாமிகண்ணு, மாநில துணை தலைவர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்களின் 2021-2025 காலத்திற்கான ஊதிய உயர்வு தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் காணப்படும் முரண்பாடுகளை களைய வேண்டும், கடந்த காலங்களில் இதுபோன்று அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் வடிவேல் உட்பட ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.