நாகர்கோவிலில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாகர்கோவிலில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவில் அலெக்சாண்டிரா பிரஸ் ரோட்டில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளையும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியையும் இணைத்து 'தமிழ்நாடு வங்கி' உருவாக்கிட வேண்டும். நகர வங்கிகளை மாவட்ட அளவில் இணைத்திட வேண்டும். 2015-2016 முதல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் பணி மூப்பு பட்டியலை வெளியிட வேண்டும். நகர கூட்டுறவு வங்கிகளில் வசூலிக்கப்படும் சி.பி.எஸ். மாத கட்டணத்தை குறைத்திட வேண்டும். இல்லையெனில் மென்பொருள் நிறுவனத்தை மாற்றி கட்டணத்தை குறைக்க வேண்டும். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்களின் ஊதிய உயர்வு குழு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொதுச்செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். தலைவர் முருகன், சாகுல் அமீது, சுரேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story