மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டையில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திரவியக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிவசங்கர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும். நகர கூட்டுறவு வங்கிகளை பலப்படுத்திட மாவட்ட அளவில் இணைத்திட வேண்டும். நகர, மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க நிர்வாகிகள் செந்தில்ஆறுமுகம், செல்வசேகர பாண்டியன், வரதராஜன், விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story