நாமக்கல் கோ-ஆப்டெக்சில்30 சதவீத தள்ளுபடியில் ஜவுளி விற்பனைகலெக்டர் உமா தொடங்கி வைத்தார்


நாமக்கல் கோ-ஆப்டெக்சில்30 சதவீத தள்ளுபடியில் ஜவுளி விற்பனைகலெக்டர் உமா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Sept 2023 12:30 AM IST (Updated: 21 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் உமா நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

இங்கு அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சீபுரம் பட்டு சேலைகள், ஆரணி பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு சேலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஏற்றுமதி ரகங்களான ஏப்ரான், குல்ட் மெத்தைகள், கையுறைகள், டேபுள்மேட், ஸ்கிரின் துணிகள், தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகளும் உள்ளன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் ஒரு விற்பனை நிலையத்திற்கு ரூ.75 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் காங்கேயவேலு, நாமக்கல் விற்பனை நிலைய மேலாளர் செல்வாம்பாள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story