ஆசிரியர் தகுதி தேர்வுக்கு பயிற்சி


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு பயிற்சி
x

கள்ளக்குறிச்சியில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு பயிற்சி வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது.

கள்ளக்குறிச்சி

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023-ம் ஆண்டுக்கான திட்ட நிரலில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு சுமார் 6,553 காலிபணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு சுமார் 3,587 காலிபணியிடங்களுக்கும் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் அறிவிப்பு வெளியாக உள்ளது.

இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வபயிலும் வட்டத்தில் போட்டித்தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது. இந்த பயிற்சி வகுப்பு அரசு விடுமுறையை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

பயனடையலாம்

மேலும் இந்த தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பயன்பெறும் வகையில் நூலகம், இணையதளம் மற்றும் அமர்ந்து படிக்க ஏதுவாக வகுப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. எனவே பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித்தகுதியை குறிப்பிட்டு 8807204332 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். இதன் மூலம் 18/63,நேப்பாள் தெரு, கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் செயல்பட்டு வரும் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ள இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த தகவல் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story