கூழையாறு தூர்வாரும் பணி தொடக்கம்


கூழையாறு தூர்வாரும் பணி தொடக்கம்
x

கூழையாறு தூர்வாரும் பணி தொடங்கியது

திருச்சி

லால்குடி அருகே திருமங்கலம் அணைக்கட்டிலிருந்து கூழையாறு தொடங்கி பூவாளூர், காட்டூர், செம்பரை, செங்கரையூர், டி. கல்விக்குடி வழியாக சென்று இறுதியில் கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. கூழையாறு தூர்ந்து உள்ளதால் கடந்த ஆண்டு பெய்த மழையால் கரையில் அரிப்பு ஏற்பட்டு வெள்ளம் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் சேதம் அடைந்தன. எனவே கூழையாற்றை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில், பொதுப்பணித்துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் கூழையாற்றில் டி.கல்விக்குடி கிராமத்தில் இருந்து திண்ணியம் வரை 8 கி.மீ தூரம் தூர்வாரி கரையை பலப்படுத்த ரூ.ஒரு கோடியே 95 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று செங்கரையூர் கூழையாற்றை தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணிகள் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் அரியூர் பாலா, ஒன்றிய கவுன்சிலர் நிவாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story