கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் ரோந்து பணி


கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் ரோந்து பணி
x

முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டை லகூன் பகுதி மற்றும் அலையாத்திக்காடுகள் பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தலை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு குழுமம், வனத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இணைந்து வனத்துறைக்கு சொந்தமான படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த ரோந்து பணியில் கடலோர பாதுகாப்பு குழுமம் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி மற்றும் தலைமை காவலர் கலைவாணன், வனத்துறையை சேர்ந்த வனக்காப்பாளர் அபிராமி, மீன்வளத்துறை கடலோர அமலாக்கப் பிரிவு காவலர் சுரேஷ் மற்றும் அதிகாாிகள் கலந்து கொண்டனர். அப்போது மீனவர்களிடம் கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தல் ஒழிப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story