கொடுமுடி அருகே கற்கள் பெயர்ந்த சாலை; தடுமாறும் வாகனங்கள்- தார் ரோடு போட கோரிக்கை
கொடுமுடி அருகே சாலையில் கற்கள் பெயர்ந்து காணப்படுவதால் வாகனங்கள் தடுமாறுகின்றன. அதனால் தார் ரோடு போட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடுமுடி
கொடுமுடி அருகே சாலையில் கற்கள் பெயர்ந்து காணப்படுவதால் வாகனங்கள் தடுமாறுகின்றன. அதனால் தார் ரோடு போட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கற்கள் ெபயர்ந்த சாலை
கொடுமுடி அருகே உள்ள சோளக்காளிபாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து பழைய சோளக்காளிபாளையத்தில் உள்ள மயானம் வரையில் உள்ள தார் சாலை கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் இந்த சாலை உள்ளது. பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ- மாணவிகள், விவசாய பணிகளுக்கு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், வேலைக்கு மோட்டார் சைக்கிளில் செல்வோர் என நாள்தோறும் ஏராளமானவர்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
நடந்து செல்ல முடியாது
சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து இருப்பதால் வாகனங்கள் தடுமாறுகின்றன. இதுவரை பலர் கீழே விழுந்து காயமடைந்து இருக்கின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் சிலர் ஓட்ட முடியாமல் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தள்ளிக்கொண்டே செல்கிறார்கள். முதியவர்கள் இந்த சாலையில் நடந்து செல்ல முடியாது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து புதிய தார் ரோடு போட்டு தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.