விவசாயிகள் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்
தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்
தாராபுரம்,
தாராபுரத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞரணி சார்பில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு சிதறும் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். குண்டடம் ராசு முன்னிட்டு வகித்தார்.அதில்கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 1-ந்தேதி முதல் சிதறு தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க கோரியும், தமிழகத்தில் கள்ளுக்கு தடையை நீக்கி கள்இறக்க அனுமதிக்க வேண்டும். எந்தவித நிபந்தனையும் இன்றி விவசாயிகளிடம் கொப்பரை தேங்காயை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் சத்துணவு திட்டத்தில் தேங்காய்பால், தேங்காய் எண்ணெய் சேர்க்கக் கோரியும், அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதன்பிறகும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகளையும் திரட்டி சென்னை தலைமை செயலகம் முன்பு சிதறு தேங்காய் உடைப்பு போராட்டம் நடத்துவது என ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகள் தெரிவித்தனர்